விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 பிரதமர் உரை!

4 March, 2021, Thu 17:44   |  views: 16185

பிரதமர் Jean Castex மற்றும்  சுகாதார அமைச்சர் Olivier Véran இணைந்து முக்கிய ஊடக சந்திப்பினை மேற்கொண்டனர். அதன் போது நாம் நேரலையாக உடனுக்குடன் செய்திகளை வழங்கியிருந்தோம்.
 
நேரலை நிறைவடைந்தது. நன்றி!!
 
<<உள்ளிருப்பு சாத்தியமில்லாதது>> என Jean Castex அறிவித்துள்ளார். ஆனால் அது அவசியமற்ற ஒன்றானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒருவருட காலமாக நாம் கொரோனா வைரசுடன் பல்வேறு விதங்களில் போராடி வருகின்றோம். உள்ளிருப்பு, பரிசோதனைகள், தடுப்பூசிகள் என. இதில் நாம் உள்ளிருப்பின் அவசியத்தையும், பொருளாதாரத்தின் தாக்கத்தினையும் படிப்பினையாக பெற்றுக்கொண்டுள்ளோம். அதேவேளை, சமூக மற்றும் மனித மாறுதல்களையும் அறிந்துள்ளோம்!>> என பிரதமர் Jean Castex மேலும் தெரிவித்தார்.
 
<<மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். தடுப்பூசிகள் இருக்கின்ற போதும், மருத்துவர்களை காப்பாற்றுவதே அவசியமான ஒன்றாகும். வைரஸ் பரவ விடாமல் தடுப்பதினால் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதையும் தடுக்கலாம்! >> என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.
 
<<மக்கள் வீட்டில் இருந்து தங்களது பணிகளை மேற்கொள்ளுவதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம். கிட்டத்தட்ட 30 வீத தொற்றினை குறைக்கலாம் என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.
 
அதிக தொற்று கொண்ட மாவட்டங்களுக்கு என 135.000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
 
மார்ச் 15 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களில் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
50 இல் இருந்து 74 வயதுக்குட்பட்டவர்கள் நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். இதற்கு எவ்வித மருத்துவரின் பரிந்துரை கடிதங்களும் (prescription médicale) தேவையில்லை என பிரதமர் தெரிவித்தார்
 
ஏப்ரல் நடுப்பகுதிக்குள் குறைந்தது 10 மில்லியன் மக்கள் தங்களது முதல்கட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுவிடுவார்கள் என பிரதமர் Jean-Castex தெரிவித்தார்.
 
முன்னதாக “தீவிர கண்காணிப்பு வலையமாக” 20 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்கள் இதில் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hautes Alpes, Aisne மற்றும் Aube ஆகிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு தற்போது 23 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 <<மாகாணங்களுக்கிடையேயான பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். <<நெருக்கடியான இடங்களுக்கு பயணிப்பதை தவிப்பதன் மூலம் நாம் கொரோனா பரவலை இலகுவில் தடுக்கலாம்!>> என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
 
அதிக தொற்று உள்ள மாவட்டங்களில் 10.000 சதுர மீற்றர் பரப்பளவுக்கு மேற்பட்ட உணவு விற்பனை தவிர்ந்த கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றதாக பிரதமர் Jean Castex தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் முகக்கவசங்கள் அணிந்து பயணிக்க வேண்டும். அனைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் தடை விதிக்கப்படுகின்றது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். <<எங்கெல்லாம் வைரஸ் தொற்று பரவவில்லையோ... அங்கெல்லாம் நாம் புதிதாக தொற்றினை பரப்பாமல் இருக்க வேண்டும்!>> எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
 
18.05 : பா து கலேயில் வார இறுதி ஊரடங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Jean Castex தெரிவித்தார். அதன்படி, சனிக்கிழமை காலை 8 மணியில் இருந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை முழு நேர ஊடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த கட்டுப்பாடு அடுத்த வாரமும் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
 
18.02 : நாம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. <<நாம் பயந்ததை விட குறைவாகவே வைரஸ் பரவி வருகின்றது.>> என தெரிவித்த பிரதமர், << முதல் இரண்டு தொற்று அலையில் நாம் சந்தித்திருந்த அதிவேக தொற்றினை நாம் தற்போது எதிர்கொள்ளவில்லை!>> என தெரிவித்தார்.
 
 
17.53 : அரசு 765.000 கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளதாக direction générale de la santé (DGS) அறிவித்துள்ளது. அனைத்தும் AstraZeneca தடுப்பூசிகள் என அறிய முடிகிறது.
வரும் வாரத்தில் 33.000 மருத்துவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
17.43 : நாடு முழுவதும் மிகப்பெரிய அளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவு பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது.
 
 
17.38 Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உமிழ் நீர் மூலம் பரிசோதிக்கப்பட்டதில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல் து பிரான்சுக்குள் 1.000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு (மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து) உமிழ்நீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி