Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 பிரான்சில் கொரோனா : சில முக்கிய திகதிகள்..!!

26 October, 2020, Mon 7:00   |  views: 7004

பிரான்சில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரையான சில முக்கிய திகதிகள் உங்களுக்காக நாம் தொகுத்துள்ளோம். 
 
ஆசியாவை தாண்டி ஐரோப்பாவில் முதலாவது கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி 1 ஆம் திகதி கண்டறியப்பட்டது. 
 
அதுவும் பிரான்சில். பரிஸ் நகரிலும் Bordeaux நகரிலும் இந்த தொற்று பதிவானது. சீனாவில் இருந்து வருகை தந்த சில சுற்றுலாப்பயணிகள் மூலம் இந்த கொரோனா பிரான்சில் பரவியது. 
 
பிரெஞ்சு அரசு மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடைமுறைகள் என்ன என்பதை அறிந்து தயாராகுவதற்கு முன்னர் நிலமை கை மீறி சென்றது. 
 
கொரோனா தொற்றை கண்டறிய போதிய வசதிகள் இல்லை, PCR பரிசோதனைகள் என்ற வசதி இல்லை. மிக முக்கியமாக முகக்கவசங்கள் எங்கேயும் இல்லை. 
 
பதினைந்து நாட்கள் ஓடியது. பெப்ரவரி 15 ஆம் திகதி, ஆசியா தவிர்த்த முதலாவது மரணம் பிரான்சில் பதிவானது. 
 
பரிசின் Bichat மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது சீன பெண்மணி ஒருவர் சாவடைந்தார். 
 
****
 
பெப்ரவரி 16 ஆம் திகதி, சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து Agnès Buzyn விலகிக்கொள்ள Olivier Véran புதிய சுகாதார அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
பெப்ரவரி 29 ஆம் திகதி கொரோனா தொற்று 100 பேருக்கு பரவியிருந்தது. 
 
****
 
மதுச்சாலைகள், திரையரங்குகள், பொது இடங்கள் மூடப்படுவதாக மார்ச் 14 ஆம் திகதி பிரதமர் Edouard Philippe அறிவித்தார். ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.  மறுநாள் மார்ச் 15 ஆம் திகதி நகரசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது. 
 
****
 
மார்ச் 17 ஆம் திகதி வெளியில் செல்வதற்கு அனுமதி பத்திரம் வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 100,000 காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
 
****
 
அடுத்தடுத்த நாட்களில் கொரோனா மிக வீரியமாக பரவியது. நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை அதிகரித்து ஏப்ரல் 7 ஆம் திகதி 10,000 பேர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
*****
 
பிரான்சின் பொருளாதாரம் (GDP) 5% வீதத்தால் சரிந்தது. அவசரகால நிதியாக 100 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
 
****
 
எட்டு வார உள்ளிருப்பின் பின்னர் மே 11 ஆம் திகதி, உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்பட்டது. 
 
****
 
ஜூன் 14 ஆம் திகதி பிரான்சில் அனைத்து மாவட்டங்களும் கொரோனா பிடியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. Guyana மற்றும் Mayotte தவிர்ந்த அனைத்து பிராந்தியங்களும் பச்சை நிற தேசமாக மாறியது. 
 
*****
 
 
ஜூன் 28 ஆம் திகதி நகரசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கள் இடம்பெற்றது. 
 
****
 
ஓகஸ்ட் 20 ஆம் திகதி மீண்டும் கொரோனா தொற்று வீரியம் கொண்டது.
 
****
 
செப்டம்பர் 1 ஆம் திகதி பிரான்சில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 
 
****
 
செப்டம்பர் 23 ஆம் திகதி பிரான்சில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ளதாக சுகதார அமைச்சர் Olivier Véran அறிவித்தார். 
 
***
 
ஒக்டோபர் 17 ஆம் திகதி இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
 
***
 
ஒக்டோபர் 23 ஆம் திகதி பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டது.
 
****
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 25 ஆம் திகதி பிரான்சில் முதன் முறையாக ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்றாக 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்