வன்முறைகளை தவிர்க்கும் முகமாக, நேற்று புதன்கிழமை மாலை பரிசில் உள்ள பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட்டன.
ஆபிரிக்க கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் நேற்றைய தினம் துனிஷியாவும், நைஜீரியாவும் மோதிக்கொண்டன. இந்த போட்டிகளின் போது பிரான்சில் பல இடங்களில் வன்முறை வெடிக்கும் என கருதப்பட்டு பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட்டன.
முதலாம் வழி மெற்றோவில் மாத்திரம் Tuileries,
Concorde,
Champs Elysées-Clemenceau,
Franklin D. Roosevelt,
Charles De Gaulle-Etoile,
Argentine sont fermées
ஆகிய நிலையங்கள் மூடப்பட்டன.
இவை தவிர, மேலும் பல நிலையங்கள் 21:00 மணியில் இருந்து இன்று அதிகாலை வரை மூடப்பட்டிருந்தன.
குறித்த நிலையங்களில் சில நிலையங்கள் மஞ்சள் மேலங்கி போராட்டத்தினால் சனிக்கிழமைகளில் பொதுவாகவே மூடியிருக்கும், தற்போது உதைபந்தாட்ட ரசிகர்களை சமாளிப்பதற்காக இந்த நிலையங்கள் மூடபட்டுள்ளன எனவும், நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் இதே காரணத்துக்காக குறித்த நிலையங்கள் மூடப்பட உள்ளன எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.