எழுத்துரு விளம்பரம் - Text Pub |
32. இந்தப் பெயர் கூட்டு எண்ணை உடையவர்களுக்கு என்றும் பொதுமக்களின் ஆதரவு உண்டு. தங்களை அறியாமலேயே புதுப்புதுக் கருத்துகளை வெளியிடுவர். இந்த எண் எவரையும் எளிதாகப் பிரமுகராக்கக்கூடியது. வசீகரத்தை அளிக்கும். மனத்தில் தோன்றியபடி வாழ்ந்து வந்தால் வாழ்க்கை அற்புதம் நிறைந்ததாக அமையும். பிறர் யோசனைப்படி நடக்க ஆரம்பித்தால் தோல்விமேல் தோல்வி ஏற்படும். இதை அறிவின் பீடம் என்றும் குறிப்பிடுவர். சமயோசித புத்தியும், வேடிக்கையாகப் பேசும் திறமையும் உண்டாகும். வாழ்வும், தாழ்வும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இவர்கள் மேதாவியாவர். இளமை மாறாத தோற்றமிருக்கும்.