எழுத்துரு விளம்பரம் - Text Pub |
3 பிறந்த தேதியோ அல்லது தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றைக் கூட்டி வந்த தொகையோ 3 ஆக இருந்து, பெயர் கூட்டு எண்ணும் 3 ஆக இருந்தால் தீங்கு இல்லை. ஆனால் மற்ற எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த எண்ணால் குறிக்கப்படும் பெயரை உடையவராக இருந்தால் வாழ்க்கை பயனற்றதாகமுடியும். அதாவது இவர்கள் அனுபவிக்க வேண்டிய பலன்களை மற்றவர்கள் அனுபவிக்க இவர்கள் இடையறாது உழைத்த வண்ணமிருப்பர். இந்த எண் உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும் குறிக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையும், படிப்படியான முன்னேற்றமும் ஏற்படும். கல்வி மிகும்.