ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் வெடித்து சிதறியது
24 வைகாசி 2026 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 313
அமெரிக்காவின் பிரபல பணக்காரர் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட, வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த 'ஸ்டார்ஷிப்' விண்கலம், தனது சோதனைப் பயணத்தின் இறுதிப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
ஒரு மணித்தியாலம் நீடித்த இந்த விண்வெளிப் பயணத்தின் போது சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், இந்தச் சோதனைப் பயணம் பெருமளவில் வெற்றிகரமாக அமைந்ததாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்கலம் இந்தியப் பெருங்கடலில் மோதி தீப்பிழம்புகளாக மாறிய போதிலும், திட்டமிட்ட இலக்குகளில் பெரும்பாலானவை எட்டப்பட்டதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் நேரலை ஒளிபரப்பின் போது தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' , எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்த மேம்படுத்தப்பட்ட 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தையே முழுமையாக நம்பியிருக்கிறது. இதனால் இந்தச் சோதனை ஓட்டம் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு முனையிலிருந்து விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
சோதனைக்காக 20 போலி 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்களை இது சுமந்து சென்றதுடன், பயணத்தின் பாதியிலேயே அவை வெற்றிகரமாக விண்வெளியில் விடுவிக்கப்பட்டன.
உலகைச் பாதியளவு சுற்றிவந்து இந்தியப் பெருங்கடலை நோக்கிய இலக்கை நோக்கி விண்கலம் பயணித்தது.
விண்கலம் விண்வெளியில் பயணித்த போது, அதன் எஞ்சின்களில் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திட்டமிட்ட துல்லியமான சுற்றுப்பாதையை அடையவில்லை. "இதுவொரு வழக்கமான சுற்றுப்பாதை நுழைவு அல்ல" என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பேச்சாளர் டான் ஹுவாட் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோல், 'சூப்பர் ஹெவி பூஸ்டர்' எதிர்பார்த்தபடி விண்கலத்திலிருந்து பிரிந்த போதிலும், பூமியை நோக்கித் திரும்பும் போது அதன் எஞ்சின் எரியும் செயல்முறை தோல்வியடைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பூஸ்டர், மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
இறுதிக்கட்டத்தில் விண்கலம் வெடித்தது எதிர்பாராத ஒன்று அல்ல என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சோதனையின் மூலம் விண்கலத்தை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் முன்கூட்டியே வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கல ஏவுதல் குறித்து தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எலோன் மஸ்க் இதுவொரு காவியத்தன்மை வாய்ந்த ஏவுதல் மற்றும் தரையிறக்கம் என்று வர்ணித்துள்ளதுடன், "எனது குழுவினர் மனிதகுலத்திற்கான ஒரு வரலாற்று இலக்கை அடித்து சாதித்துள்ளனர்" எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan