ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு; மத்திய அரசு பரிசீலனை
24 வைகாசி 2026 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 100
ஜேஇஇ - நீட் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே நுழைவுத் தேர்வாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அண்மையில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வி வினாத்தாள் கசிந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.
மேலும் அடுத்தாண்டு முதல் கணிணி வழியாக இத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பார்லி. குழு விசாரணையும் நடத்தி வருகிறது.
இந் நிலையில், ஜேஇஇ-யுடன் ஒருங்கிணைந்து ஒரே தேர்வாக நீட்டை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இளநிலை பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்தலாமா? அது சாத்தியமாகுமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பார்லி. குழுவிடம் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு நீட் வினாத்தாள் முறைகேடுகளுக்கு பின்னர், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக்குழு அளித்த பரிந்துரைகளின் படி இத்தகைய பரிசீலனையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.
ஒருங்கிணைந்த முறையில் தேர்வை நடத்துவது என்ற முடிவு பரிசீலனையில் இருந்தாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan