உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி? கூட்டணி பிளவால் ஸ்டாலின் முடிவு
24 வைகாசி 2026 ஞாயிறு 06:21 | பார்வைகள் : 161
சட்டசபை தேர்தலில் ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகள், த.வெ.க., பக்கம் போய் விட்டதால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்க தி.மு.க., தயாராகி வருகிறது. 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுக்க உள்ளோம். அதற்கு கட்சியினர் தயாராக வேண்டும்' என, கட்சி நிர்வாகிகளிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., --- இந்திய கம்யூ., - வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளன.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் இடம் பெறாமல் இருப்பதால், அக்கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
த.வெ.க., அமைச்சரவையில் வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் இடம் பெற்றதால், இனி, தி.மு.க., கூட்டணியில் அக்கட்சிகள் இருக்க முடியாது.
அதனால் தான், தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜாவும், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியும், அந்த இரு கட்சிகளையும் காட்டமாக விமர்சித்துள்ளனர். அதனால், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் வி.சி.க., - முஸ்லிம் லீக் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நேற்று மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது, அவர்களிடம் ஸ்டாலின், 'அமைச்சர் பதவி ஏற்றுள்ள வன்னி அரசு, ஷாஜஹானுக்கு வாழ்த்துகள். ஆனால், அக்கட்சிகளை யாரும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம். இனி கூட்டணி கட்சிகளை நம்பியிருக்க வேண்டாம். வரும் உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடும் முடிவை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிடுவதால், அடிமட்ட அளவில் கட்சியின் பலத்தை பரிசோதித்து பார்க்க முடியும். கூட்டணி தர்மத்தை எல்லாம் பார்க்காமல், தி.மு.க., தன் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்காமல், கட்சியின் சாமானிய தொண்டர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்க முடியும்.
'சர்வே' அறிக்கை, உளவுத்துறை அறிக்கை என நேரத்தை வீணாக்காமல், தி.மு.க.,வின் உண்மையான செல்வாக்கை துல்லியமாக அறிய முடியும்.
கொள்கை அடிப்படையில் நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடியும். கிராமப்புறங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை, கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த, இது உதவும்.
தனித்து போட்டியிடும் போது, வெற்றி பெறுவது கடினமாக இருக்கலாம். ஆனால், தி.மு.க., பெரிய கட்சி என்பதால், அடிப்படை பலத்தை அறிந்து பணியாற்ற முடியும்.
உள்ளாட்சி தேர்தல் முடிவு வாயிலாக, வரும் 2029 லோக்சபா தேர்தல் களத்தை தயார் செய்ய முடியும் என்பதால், தனித்து போட்டியிடும் முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan