சென்னையில் தொடங்க உள்ள BBL கிரிக்கெட் - எப்போது தெரியுமா?
19 வைகாசி 2026 செவ்வாய் 12:07 | பார்வைகள் : 1521
சென்னையில் பிபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.
இந்தியா, உலகளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக உள்ளது.
BBL தொடரின் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில், சென்னையில் தொடக்க போட்டியை நடத்துவது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், கடந்த 3 மாதங்களாக பேசி வந்தது.
இந்தியா வந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், சேப்பாக்கத்தில் போட்டியையை நடத்த பிசிசிஐ ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்க போட்டி இங்கு நடைபெற உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி ஸிக்ஸர்ஸ் விளையாட உள்ளது.
டிசம்பர் மாதம் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பரில் சென்னையில் பருவ மழை பெய்யும் என்பதால் வானிலை போட்டிக்கு சவாலாக இருக்கும். அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2025 - 26 BBL தொடரில் சிட்னி தண்டர் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம், இதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். ஆனால், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire