16 மாநிலங்களில் 3ம் கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் தொடக்கம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
15 வைகாசி 2026 வெள்ளி 12:19 | பார்வைகள் : 1035
தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து மேலும் 16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காலமானவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர், இருவேறு இடங்களில் வாக்காளர்களாக பெயர் பதிந்தவர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களை நீக்க தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தமிழகம், மேற்கு வங்கம் என 2 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. இந் நிலையில் 3ம் கட்டமாக மேலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
3ம் கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்கள் விவரம்;
ஆந்திரா
அருணாச்சல பிரதேசம்
சண்டிகர்
தாத்ராநகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ
ஹரியாணா
ஜார்க்கண்ட்
கர்நாடகா
மஹாராஷ்டிரா
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
புதுடில்லி
ஒடிசா
பஞ்சாப்
சிக்கிம்
திரிபுரா
தெலுங்கானா
உத்தரகாண்ட்
எஸ்ஐஆர் 3ம் கட்ட பணிகள் போது அரசியல் கட்சிகளின் 3.42 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் உதவியுடன் 3.94 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் 36.73 கோடி வாக்காளர்களை வீடு, வீடாகச் சென்று சந்திக்க உள்ளனர். இந்த பணிகள் மே 30ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 5 முதல் அக்டோபர் 21ம் தேதி வரை வெளியிடப்படும்.
முன்னதாக 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளில் 5.18 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan