தவெக பெயரில் அரசு அலுவலகங்களில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ்
15 வைகாசி 2026 வெள்ளி 09:46 | பார்வைகள் : 1296
தவெக பெயரை கூறியோ, என் பெயரை கூறியோ அரசு அலுவலகங்களில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது என்று முதல்வர் கூறி இருக்கிறார் என அமைச்சர் ஆதவ் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சட்டசபையில் அரசின் தீர்மானம் வெற்றி பெற்ற பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விவ்லிவாக்கத்தில் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா விற்பனையை தடுப்பது, டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள கூறி இருக்கிறோம். போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். போதை பொருள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க சொல்லி இருக்கிறோம்.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளோம். புகார் அளித்தால் அதை வீடியோ பதிவு செய்ய சொல்லி உள்ளோம். வில்லிவாக்கத்தில் முன்கூட்டியே மின்தடை குறித்து தெரிவிக்குமாறு கூறி இருக்கிறோம். இங்கு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது, எனவே வருவாய்துறையிடம் கூறி எங்கெல்லாம் அரசு நிலங்கள் இருககிறதோ, அவற்றை வரையறை செய்து தர கூறியிருக்கிறோம். திட்டங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிக்க சொல்லி இருக்கிறோம்.
தவெக பெயரை கூறியோ, என் பெயரை கூறியோ அரசு அலுவலகங்களில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது என்று முதல்வர் கூறி இருக்கிறார். எந்த ஒப்பந்ததாரருக்கும் தவெகவிடம் இருந்து எந்த கமிஷனும் கொடுக்கப்படாது என்பதை பதிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire