Paristamil Navigation Paristamil advert login

இந்தியா கூட்டணி வெறும் கற்பனையில் மட்டுமே இருக்கிறது: பாஜக

இந்தியா கூட்டணி வெறும் கற்பனையில் மட்டுமே இருக்கிறது: பாஜக

9 ஆனி 2026 செவ்வாய் 14:38 | பார்வைகள் : 167


காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட பிற உறுப்பு கட்சிகளிடம் காங்கிரஸ் ஏற்படுத்தி உள்ள கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டி ஆளும் பா.ஜனதா இதை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா தனது எக்ஸ் தளத்தில், 'இந்தியா கூட்டணி என்று எதுவும் இல்லை. அது வெறும் கற்பனையே. வெளித்தோற்றத்துக்கு கூட்டங்கள் நடக்கின்றன. ஆனால் களத்தில் உண்மையான உறுதிப்பாடு ஒருபோதும் காணப்படுவதில்லை' என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அவர், 'தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல், மற்றும் இடதுசாரிகள் காங்கிரசைத் தாக்கியதால் இண்டியா கூட்டணி முழுமையாகச் சிதைந்ததைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியும் தற்போது காங்கிரசைக் குறிவைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.