இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள்
9 ஆனி 2026 செவ்வாய் 04:15 | பார்வைகள் : 163
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளது என சர்வதேச அமைப்பு கணித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. சிப்ரி எனப்படும் இந்த நிறுவனம் 1966 முதல் உலகளாவிய ஆயதங்ள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளை கண்காணித்து வருகிறது. அது தொடர்பாக ஆய்வறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது.
அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் ஆகும். விமானம், நிலத்தில் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வாயிலாகவும் பயன்படுத்த முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்கள் இருந்தது என இந்த அமைப்பு கணித்து இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 190 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 12 12 அணு ஆயுதங்கள் போர்க்களத்தில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. 178 அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் கடந்த ஆண்டு வைத்திருந்த 170 அணு ஆயுதங்களே இந்தாண்டும் வைத்து உள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
கடந்த 2025ல் 8.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.9 சதவீதம் அதிகம் ஆகும்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
உலகில் அதிகம் ஆயுதங்கள் இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2021 -25 காலத்தில், சர்வதேச அளவில் நடந்த ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீதம் இந்தியாவின் பங்கு ஆகும். பாகிஸ்தான் 4.2 சதவீதம் இறக்குமதி ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan