Paristamil Navigation Paristamil advert login

காங். அணுகுமுறையால் இண்டி கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி!திருமாவளவன்

காங். அணுகுமுறையால் இண்டி கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி!திருமாவளவன்

9 ஆனி 2026 செவ்வாய் 05:04 | பார்வைகள் : 186


காங்கிரஸ் கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

டில்லியில் இன்று நடைபெற்ற இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசினோம் என்பதை விசிக தலைவர் திருமாவளவன் தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது;

இளைஞர்களுடைய பிரச்னைகளுக்காக நாம் தெருவில் இறங்கி போராடாத காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் குரலை வெளிப்படுத்துகிற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை நாம் எதிர்நிலையில் வைத்து பார்க்கக்கூடாது. அவர்கள் எழுப்பும் பிரச்னைகளை இன்னும் விரிவான தளத்தில் இண்டி கூட்டணி முன்னெடுக்க வேண்டும். அதற்காக நாடு தழுவிய போராட்டங்களை நாம் அறிவிக்க வேண்டும்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொண்ட அணுகுமுறை  இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல.

எனவே காங்கிரஸ் தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.