தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது தி.மு.க. வழங்கிய கூப்பன், படிவங்கள்
14 சித்திரை 2026 செவ்வாய் 07:27 | பார்வைகள் : 1408
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.வினர் வினியோகிக்க வைத்திருந்த ரூ.8,000 கூப்பன் மற்றும் இலவச பொருட்களுக்கான படிவத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதியப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வருகின்றன. அவற்றை பதிவு செய்து, அருகாமையில் உள்ள பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அக்குழுவினர் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட புகார் சரியானதா என ஆய்வு செய்கின்றனர். உறுதி செய்ததும் ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழுவினருக்கு, எம்.என்.ஜி. வீதி, ம.ந.க. வீதி, வெங்கடராமன் மண்டபம் பகுதியில் கூப்பன் மற்றும் இலவச பொருட்கள் படிவம் கொடுப்பதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்குழுவினர் விரைந்து சென்று, எம்.என்.ஜி. வீதியில் பிரபாகரன் என்பவரிடம் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் 66 ஐ கைப்பற்றி, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
2 இலவச பொருட்கள் படிவம் கைப்பற்றி ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறையை மீறி, வாக்காளர்களை கவரும் வகையில் இலவச பொருட்கள், கூப்பன் வழங்க முயற்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் புகார் கொடுத்திருக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire