தமிழகத்தில் கஜானா காலி: காங்., நிர்வாகி பிரவீன் தகவல்
12 வைகாசி 2026 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 1622
தமிழகத்தில் கஜானா காலி என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தன் முதல் உரையில், 'தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து, வழித்து வைத்து விட்டு சென்றுள்ளனர்' என கூறினார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், 'தமிழக அரசின் நிதிநிலை குறித்து, கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் தெளிவாக சொல்லி விட்டோம். அதன் பின் தான், விஜய் வாக்குறுதி கொடுத்தார். ஓட்டு போட்ட மக்களை மீண்டும் ஏமாற்றி திசை திருப்பாதீர்கள்' என கூறினார்.
இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக, 'தமிழகத்தின் கஜானா காலி' என, ராகுலின் நண்பரும் காங்கிரஸ் நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி, 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், 'தமிழக அரசின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும், 20 ரூபாய்க்கும் மேல் கடனுக்கான வட்டிக்கே செலவாகிறது. இது, மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம். வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என, கட்டாய செலவுகளுக்கே 40 ரூபாய் போய் விடுகிறது. கஜானா காலி' என குறிப்பிட்டுள்ளா
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire