Paristamil Navigation Paristamil advert login

மீண்ட பென் ஸ்டோக்ஸ்- நியூஸிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக களம் உறுதி

மீண்ட பென் ஸ்டோக்ஸ்- நியூஸிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக களம் உறுதி

11 வைகாசி 2026 திங்கள் 12:22 | பார்வைகள் : 1711


இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

34 வயது ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த பெப்ரவரியில் பயிற்சியின்போது ஏற்பட்ட கன்ன எலும்பு முறிவிலிருந்து ஸ்டோக்ஸ், தனது உடற்தகுதியைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். தற்போது அவர், காயத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

ஆஷஸ் தொடருக்குப் பிறகு, இங்கிலாந்து உள்ளூர் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் ஸ்டோக்ஸ், டர்ஹாம் அணிக்காக களமிறங்கி ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்த சில மாதங்களில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட 2 தொடர்களில் இங்கிலாந்து விளையாட உள்ளது.

வேகப்பந்து வீச்சுத் தேர்வுகளின் பற்றாக்குறையால், சொந்த மண்ணில் நடைபெறும் இந்த கோடைக்காலப் போட்டிகளில் ஸ்டோக்ஸ் புதிய பந்துடன் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.