எரிபொருள் விலையேற்றத்தால் திணறும் டக்சி சாரதிகள்: அரசுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!!
11 வைகாசி 2026 திங்கள் 08:20 | பார்வைகள் : 3598
எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் ஆதரவு திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது. குறிப்பாக டக்சி மற்றும் VTC சாரதிகள் தற்போதைய அரசின் உதவித் திட்டங்களில் சேர்க்கப்படாததால் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, திங்கட்கிழமை பெர்சி அமைச்சகத்தில் VTC பிரதிநிதிகளுடனும், புதன்கிழமை போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot டக்சி சங்கங்களுடனும் சந்திப்பு நடத்தவுள்ளார்.
VTC சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் Brahim Ben Ali, “எரிபொருள் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதத்திற்கு 600 முதல் 1000 யூரோ வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள 50 யூரோக்கள் உதவி மிகவும் குறைவானது” என தெரிவித்தார். மேலும், எரிபொருள் இல்லாமல் வேலை செய்ய முடியாததால் பல சாரதிகள் தொழிலை நிறுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
தேசிய டக்சி சம்மேளனத்தின் செயலாளர் Dominique Buisson , “இந்த நெருக்கடியில் டக்சி சாரதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்” என குற்றஞ்சாட்டினார். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் டக்சி சாரதிகள் ‘அதிக பயணிகள்’ என்ற வகையை விடவும் அதிக சுமையை எதிர்கொள்வதாக அவர் கூறினார். எரிபொருள் விலையை லிட்டருக்கு 1.80 யூரோவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire