செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 'குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு
8 வைகாசி 2026 வெள்ளி 16:25 | பார்வைகள் : 1499
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 மற்றும் 7) மீட்கப்பட்ட ஐந்து மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை சிறு குழந்தைகளினுடையது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதுவரை 254 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களும் வியாழக்கிழமை (7) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire