Paristamil Navigation Paristamil advert login

குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதி திருமணம்

குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதி திருமணம்

15 பங்குனி 2026 ஞாயிறு 14:08 | பார்வைகள் : 1254


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்(31) தன்னுடைய நீண்ட நாள் காதலி வன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 4ம் திகதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐ.டி.சி கவாய் ஹோட்டலில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் நிதிஷ் ராணா, சுரேஷ் ரெய்னா, ரிங்கு சிங் யஸ்வேந்திர சாஹல் உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் BCCI நிர்வாகிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வருகின்ற 17 ஆம் திகதி குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.