ஈரானிய உளவாளிகள் பிரித்தானியாவில் கைது!
6 பங்குனி 2026 வெள்ளி 17:05 | பார்வைகள் : 1446
பிரித்தானியா - லண்டனில் உள்ள யூத சமூகத்தை கண்காணித்ததாக சந்தேகிக்கப்படும் பத்து பேரை பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இதில் நான்கு பேர் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளனர் என லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு மாறாக, ஈரானின் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில், ஒரு ஈரானியர் மற்றும் மூன்று இரட்டை பிரித்தானிய குடியுரிமை கொண்ட தரப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"இன்றைய கைதுகள் நீண்டகால விசாரணையின் ஒரு பகுதியாகும். மேலும் நாங்கள் சந்தேகிக்கும் இடங்களில் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதற்கான எங்கள் தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும்.
பொதுமக்கள், குறிப்பாக யூத சமூகத்தினர் கவலைப்படக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எப்போதும் போல, விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்துக்கிடமாக எதையும் அவர்கள் பார்த்தால் அல்லது கேட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்” என கூறப்பட்டுள்ளது.
ஒரு குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 10 பேரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan