நடுக்கடலில் அழிக்கப்பட்ட ஈரானின் ட்ரோன் தாங்கி போர்க்கப்பல் - அமெரிக்கா அறிவிப்பு
6 பங்குனி 2026 வெள்ளி 11:02 | பார்வைகள் : 1780
ஈரானின் முக்கிய ட்ரோன் தாங்கி போர்க்கப்பலை அழித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மத்திய கட்டளை X தளத்தில், ஈரானின் முக்கிய ட்ரோன் தாங்கி போர்க்கப்பலை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், இரண்டாம் உலகப் போரில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கு இணையான அளவிலான மிகப்பெரிய ஈரானின் ட்ரோன் தாங்கி போர்க்கப்பல்(Drone carrier) அமெரிக்கப் படைகளால் தீக்கிரையாக்கப்பட்டது.
இது ஈரானின் கடல் வழித் தாக்குதல் திறனை கட்டுப்படுத்தும் ஒரு விரிவான மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கை என விவரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஈரானின் 83% ட்ரோன் தாக்குதல் திறன்கள், 90% ஏவுகணை தாக்குதல் திறன்களை அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 72 மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 200 ஈரானிய இலக்குகளை அமெரிக்க படையினர் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி-2 ரக போர் விமானங்கள் மூலம் 2000 பவுண்டு எடையுள்ள குண்டு வீசப்பட்டு ஈரானின் விண்வெளி கட்டளை மையம் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan