மேசோன் நகரில் வன்முறையான 60 முதல் 80 பேர் குழுமோதல்!

30 ஆனி 2025 திங்கள் 16:10 | பார்வைகள் : 1457
Saône-et-Loireமாகாணத்தில் உள்ள மேசோன் (Mâcon) நகரில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெரும் வன்முறையுடனான குழு மோதல் ஒன்று நடந்துள்ளது. இந்த மோதலில் 60 முதல் 80 பேர் வரை ஈடுபட்டிருந்தனர் என்று மாகாண ஆட்சி மையம் தெரிவித்துள்ளது.
மோதல் அதிகாலை 2 மணியளவில் தொடங்கியது. இது என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இத்தகராறில் ஒருவர் தீவிரமாக காயமடைந்தார் மேலும் மூன்று பேர் லேசான காயங்களுக்குள்ளானார்கள்.
உடனடியாக மோதல் நடைபெறும் இடத்திற்கு விரைந்த உள்ளகப் பாதுகாப்பு படையினரான FSI (Forces de Sécurité Intérieure) மீதும் குழக்கள் தாக்குதல் நடாத்தி உள்ளனர். இதில் ஒரு வீரர் லேசாக காயமடைந்துள்ளார்.
புதிதாக வன்முறை நிகழ்வதைத் தடுக்கும் வகையில் மேசோன் நகரில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.