விண்வெளிக்கு புறப்பட்ட இந்தியர் சுபான்ஷு
25 ஆனி 2025 புதன் 11:14 | பார்வைகள் : 3491
இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் அடங்கிய பால்கன் 9 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்வெளிக்கு புறப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தது.
பல முறை தள்ளிவைக்கப்பட்ட பின்னர், இன்று மதியம் 12 மணிக்கு, பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டது.
28 மணி நேர விண்வெளி பயணத்துக்குப் பின்னர், இந்த விண்கலம் ஜூன் 26 ஆம் திகதி மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 நாட்கள் விண்வெளியில் தங்க உள்ள அவர், அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.
விண்கலம் புறப்படும் முன்னர் மனமுருகி வேண்டிக்கொண்டிருந்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர், வெற்றிக்கரமாக விண்ணுக்கு புறப்பட்டதையடுத்து, ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
ராக்கெட் புறப்பட தொடங்கியதும், "ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்" என சுபான்ஷு சுக்லா முழக்கமிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire