யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
10 ஆடி 2025 வியாழன் 10:16 | பார்வைகள் : 8342
யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (10) மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்தனர்.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணி உரிமையாளர்கள் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire