சூர்யாவின் ’கர்ணா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாறுகிறதா?
4 ஆனி 2025 புதன் 17:06 | பார்வைகள் : 4410
சூர்யா நடிக்க இருக்கும் 600 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, பாலிவுட் திரை உலகில் ’கர்ணா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த செய்தி வெளியான நிலையில், அதன் பின் இந்த படத்தின் செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தை பாலிவுட் பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் விலகி விட்டதாகவும், அதற்கு பதிலாக ஜியோ ஸ்டுடியோ இந்த படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில், ’கர்ணன்’ கேரக்டரில் சூர்யா நடிக்க இருப்பதாகும், இந்த படத்தின் நாயகி ஆக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது, இந்த படத்தின் ஆரம்ப கால பணிகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரம் உருவாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 45’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு திரைப்படம் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று படங்களையும் முடித்த பிறகு அவர் ’கர்ணா’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan