செம்மணி புதைகுழியில் - 10 மாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
17 ஆனி 2025 செவ்வாய் 10:01 | பார்வைகள் : 9757
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பேராசிரியர் ஜீவன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என குறிப்பிட்டுள்ளார்.
உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்
மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள சோமதேவ, மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்தவாரமேஉடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire