இஸ்ரேல் - ஈரான் மோதல்- முக்கிய தளபதி மரணம் உறுதி
14 ஆனி 2025 சனி 11:49 | பார்வைகள் : 3959
காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல், திடீரென ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஈரானிய புரட்சிகர காவல் படை தலைமையகம் மற்றும் தெஹ்ரான் விமான நிலையத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத் தளபதியான அமீர் அலி ஹஜிஜதே கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்குகளை நிர்வகிக்கும் படைகளின் முக்கிய தளபதியாக இவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இந்த திடீர் மோதல் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan