Paristamil Navigation Paristamil advert login

அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

20 வைகாசி 2025 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 3436


மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான  தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்