கோலாகலமாக நடந்து முடிந்த ‘சித்தா’ பட இயக்குனரின் திருமணம்…
2 மாசி 2025 ஞாயிறு 15:04 | பார்வைகள் : 7001
தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் அருண்குமார். தற்போது இவரது இயக்கத்தில் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தென்காசி, மதுரை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்தது இந்த படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
எனவே இந்த படம் 2025 மார்ச் 27 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அருண்குமாருக்கு அஸ்வினி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் அருண்குமார் – அஸ்வினியின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire