Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் 8 தமிழ் சீசன் புரமோ படப்பிடிப்பு ஆரம்பமா?

 பிக்பாஸ்  8 தமிழ் சீசன் புரமோ படப்பிடிப்பு ஆரம்பமா?

29 ஆவணி 2024 வியாழன் 14:52 | பார்வைகள் : 9667


பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு சீசன்களாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஏழு சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் எட்டாவது சீசனை தான் தொகுத்து வழங்குவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்த நிலையில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ரம்யா கிருஷ்ணன் உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.


விஜய் சேதுபதி ஏற்கனவே புதுவையில் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பின் இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான புரமோ படப்பிடிப்பிற்கு தேதி கொடுத்துள்ளதாகவும் அதனால் பிக் பாஸ் டீம் புதுவை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புரமோ வீடியோ அடுத்த மாதம் வெளியாகலாம் என்றும் அப்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்