Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

16 ஆம் இலக்க மெத்ரோ : எப்போது சேவைக்கு வரும்..?

16 ஆம் இலக்க மெத்ரோ : எப்போது சேவைக்கு வரும்..?

1 புரட்டாசி 2023 வெள்ளி 12:29| பார்வைகள் : 1246


தற்போது துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது 16 ஆன் இலக்க மெத்ரோ. Grand Paris Express திட்டத்தின் ஒரு பகுதியான இந்த மெத்ரோ சேவை பரிஸ் நகரின் வடக்கிழக்கு பகுதியில், Seine- Saint-Denis பகுதியை முழுமையாக இணைக்கிறது.

Saint-Denis-Pleyel இல் இருந்து ஆரம்பித்து Noisy Champs வரை செல்லும் இந்த மெத்ரோ சேவை முழுக்க முழுக்க நிலக்கீழ் தொடரூந்து சேவையாகவே இருக்குமாம். வரும் 2026 ஆம் ஆண்டில் ஒரு பகுதியும் 2028 இல் இன்னொரு பகுதியும் திறக்கப்படவுள்ளது.

27.5 கிலோமீட்டர் நீளமான பாதையில் 10 தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மெத்ரோ சேவையானது 11,14,15,17 ஆகிய ஏனைய மெத்ரோ சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும்.

இதன் நிர்மாணப்பணிகளை RATP நிறுவனம் கவனித்து வந்தாலும், இதனை இயக்கும் பணி Keolis நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.