Paristamil Navigation Paristamil advert login
விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய மம்முட்டி...

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய மம்முட்டி...

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய மம்முட்டி...

8 மார்கழி 2023 வெள்ளி 12:37 | பார்வைகள் : 901


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி தற்போது படிப்படியாக பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். ஜவான் படத்துக்கு பின்னர் அவரின் மார்க்கெட் வேறலெவலில் எகிறிவிட்டது. தற்போது மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற இந்தி படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, தமிழிலும் ஏராளமான படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். தமிழில் இவர் கைவசம் மகாராஜா மற்றும் டிரெயின் ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

இதில் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் டிரெயின் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுதவிர அவர் காக்காமுட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அப்படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் மலையாள நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் தற்போது ஷூட்டிங் தொடங்கும் முன்பே அவர் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். ஏனெனில் இக்கதையை முதலில் திரைப்படமாக எடுக்க தான் திட்டமிட்டு வேலைகளை செய்துவந்தார்களாம். பின்னர் திடீரென இது வெப்தொடராக எடுக்க முடிவெடுத்ததால் மம்முட்டி இதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

மம்முட்டி இப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பை நடிக்க வைக்க உள்ளார்களாம். இவர் அண்மையில் வெளியான ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ஜெயிலரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர, பிகில், ஆரண்ய காண்டம் போன்ற தமிழ் படங்களிலும் ஜாக்கி ஷெராப் நடித்திருக்கிறார். அவர் விஜய் சேதுபதி உடன் இணைவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்