Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ரக்பி உலகக்கிண்ணம் - பிரெஞ்சு வீரர் Antoine Dupont இற்கு முகத்தில் எலும்பு முறிவு

ரக்பி உலகக்கிண்ணம் - பிரெஞ்சு வீரர் Antoine Dupont இற்கு முகத்தில் எலும்பு முறிவு

22 புரட்டாசி 2023 வெள்ளி 07:00| பார்வைகள் : 2182


ரக்பி உலக்கக்கிண்ண போட்டியில் ( Coupe du monde de rugby) நேற்று இடம்பெற்ற பிரான்ஸ் நபீபியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், பிரான்சின் வீரர் Antoine Dupont இற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

போட்டியின் இரண்டாம் பாதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. முகத்தில் உள்ள தாடை எலும்பு உடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Aix நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

நேற்றைய போட்டியில் பிரான்ஸ் 96-0 எனும் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றியை பெற்றிருந்தது. இருந்தபோதும் Antoine Dupont  இற்கு காயமேற்பட்டு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாமல் போயுள்ளமை ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.