Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

யாழில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

25 புரட்டாசி 2023 திங்கள் 11:09| பார்வைகள் : 1496


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தி விட்டு, ஏணையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

கி.ஹரிகரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) தாய்ப்பால் கொடுத்து விட்டு, குழந்தையை ஏணையில் உறங்க வைத்துள்ளார். நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால், சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பிய போது, குழந்தை அசைவற்று இருந்துள்ளது. 

அதனையடுத்து, குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.