Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

யாழில் வீதியில் சென்ற இளைஞன் கடத்தப்பட்டு கொள்ளை

யாழில் வீதியில் சென்ற இளைஞன் கடத்தப்பட்டு கொள்ளை

25 புரட்டாசி 2023 திங்கள் 16:49| பார்வைகள் : 2006


யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்ற இளைஞன் கடத்தப்பட்டு, அவரின் உடமைகள் திருடப்பட்டுள்ளன.  

மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதுடன் அவரது பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் மணிக்கூடு என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த  குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இளைஞன் கடத்தப்பட்டு, ஆள்நடமாட்டம் அற்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து கடுமையாக தாக்கியதுடன், கைத்தொலைபேசி மற்றும் மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.