Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

யாழில் வீடு புகுந்து கொள்ளை - சிக்கிய இளைஞன்

யாழில் வீடு புகுந்து கொள்ளை - சிக்கிய இளைஞன்

21 புரட்டாசி 2023 வியாழன் 09:05| பார்வைகள் : 1901


யாழ்.நகர் பகுதியில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர்கள் வீட்டில் திருடிய கைப்பேசி மற்றும் பணத்தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 16ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது வீட்டில் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், 

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொழும்புத்துறை பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், குறித்த வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும், 

ஒரு தொகை பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.