Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

முட்டை இல்லாத மயோனைஸ்

முட்டை இல்லாத மயோனைஸ்

28 ஆவணி 2023 திங்கள் 13:48| பார்வைகள் : 1362


முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே எளிதான முட்டை இல்லாத மயோனைஸ் செய்முறையைக் கொண்டு வந்துள்ளோம்.

தேவையான பொருட்கள்

1 கப் எண்ணெய்
1/4 கப் குளிர்ந்த பால்
1 1/2 தேக்கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் கடுகு தூள்
உப்பு - ருசிக்கேற்ப
2 டீஸ்பூன் தூள் சர்க்கரை

ஒரு வாய் குறுகிய பாத்திரம் அல்லது ஜாடியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிளெண்டர் அல்லது போர்க் கரண்டி கொண்டு கலக்கவும். அனைத்து பொருட்களும் ஒன்றிணையும் வரை தொடர்ந்து இதைச் செய்யவும்.

இது நீண்ட  என்றால் நீங்கள் மிக்சியைக் கூட மெதுவான வேகத்தில் வைத்து பயன்படுத்தலாம். இந்த கலவை கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தி ஆகும். நீங்கள் ஒரு கிரீமி அமைப்பைப் பெறுவீர்கள். சுத்தமான கண்ணாடி கிண்ணத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் உங்களுக்குத்  தேவையான முட்டையில்லா மயோனைஸ் கிடைத்துவிடும்.

இதை வெறுமனே அப்படியே பயன்படுத்தலாம். இல்லை என்றால் அதில் சில மாற்றங்கள் செய்து சுவை கூடுதலாக பயன்படுத்தலாம். உங்களுக்கு பிடித்த நறுக்கப்பட்ட காய்கறிகளை மயோனைசேவுடன் சேர்த்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கி வெஜ் டிப்பாகவும் பயன்படுத்தலாம்.