Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி வெற்றி பெற்ற பாயர்ன் முனிச்! 

மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி வெற்றி பெற்ற பாயர்ன் முனிச்! 

21 புரட்டாசி 2023 வியாழன் 06:46| பார்வைகள் : 889


சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாயர்ன் முனிச் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.

Allianz Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலபரீட்சை நடத்தின.

பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் பாயர்ன் வீரர் சனே 28வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். அடுத்த 4 நிமிடங்களில் செர்கே ஞாப்ரே கோல் அடித்தார். 

மான்செஸ்டர் முதல் கோல் இதன்மூலம் முதல் பாதியில் பாயர்ன் முனிச் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் முதல் கோல் அடித்தது.

அந்த அணியின் ரஸ்முஸ் மிரட்டலாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 53வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பாயர்ன் நட்சத்திரம் ஹரி கேன் கோல் அடித்தார். 

சமபலத்துடன் இரு அணிகளும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 88வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் காஸ்மிரோ அபாரமாக கோல் அடித்தார். 

இதற்கு உடனே பதிலடி கொடுக்கும் வகையில், பாயர்ன் முனிச் வீரர் மதிஸ் டெல் 90+2 நிமிடத்தில் கோல் அடித்தார். 

பின்னர் 90+5 நிமிடத்தில் காஸ்மிரோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால் இறுதியில் பாயர்ன் முனிச் அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.