Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்....

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு  தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்....

26 புரட்டாசி 2023 செவ்வாய் 14:55| பார்வைகள் : 1271


கணவன் மனைவி இடையேயான உறவில், இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து, அன்புடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த உறவை சேதப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் மற்றும் செயல்கள் இருவரிடமும் காணப்படுகிறது. தற்போது இப்பதிவில், கணவன் – மனைவி இருவரும் பயன்ப்டுத்தக்கூடாது சில வார்த்தைகள் பற்றி பார்ப்போம்.

நீ ஒரு முட்டாள், நீ ஒரு பயங்கரமான ஆள், நீ எதுவும் செய்ய முடியாது போன்ற வார்த்தைகள் கணவன் மனைவி உறவுக்குள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உன் தப்பு, நீதான் எல்லாவற்றையும் கெடுக்கிறாய், போன்ற வார்த்தைகள் ஒருவருக்கொருவர் எதிராக உணர வைக்கலாம்.

நான் உன்னை வெறுக்கிறேன், நான் உன்னை விட்டு போகிறேன் போன்ற வார்த்தைகள் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்லவும்,மேலும் அத்துடன் திருமண வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் அல்லது வாழ்க்கையையே முடித்து கொள்ளலாம் போன்ற தவறான முடிவுகளை எடுக்க தூண்டும். எனவே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டைகள் வந்தாலும், வார்த்தைகளை பயன்படுத்தும் போது மிக மிக கவனமாகவும் நிதானமாகவும் பயன்படுத்த வேண்டும்.

அன்பாய் இருங்கள் :- அன்பு என்பது எப்படிப்பட்ட மனிதனின் இருதயத்தையும் மாற்றாக கூடிய ஒன்று. ஒருவரையொருவர் மதிக்கவும், அன்புடன் நடந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளுங்கள்.இருவரும், உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

இருவரும் ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டு பேச நேரம் ஒதுக்குங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ளுங்கள். இப்படிபட்ட பண்புகளை வளர்த்துக்கொள்ளும் போது, அது மிகவும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கும்.