Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

புதிய பழவகையை அறிமுகம் செய்த ஜப்பான்

புதிய பழவகையை அறிமுகம் செய்த ஜப்பான்

16 ஆடி 2023 ஞாயிறு 10:29| பார்வைகள் : 4859


ஜப்பானின் ஹொக்கைடோவின் விவசாயிகள் புதிய பழத்தை உருவாக்கியுள்ளனர்.
 
வட்ட வடிவானதாக இருக்கும் இந்த பழம், தற்போது "எலுமிச்சை முலாம்பழம் (Lemon melon)"என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த பழம் முலாம்பழம் போல இனிப்புச் சுவை உடையதாகவும், எலுமிச்சை போல சற்று புளிப்ப்பு சுவை உடையதாகவும் இருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
 
பேரிக்காய் போல மிருதுவாக வளர ஆரம்பிப்பதுடன் பழுக்கும் போது மிகவும் மென்மையாக மாறுகின்றது. இந்த பழம் முதல் முறையாக விற்பனைக்காக இவ்வருடம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
இந்த வருடம் சுமார் 3,800 எலுமிச்சை முலாம்பழங்கள் சன்டோரி நிறுவனத்தால் பயிரிடத் தீர்மானித்துள்ளது.
 
இவை இவ்வாண்டின் ஆகஸ்ட் மாத இறுதியில் சப்போரோ பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.
 
ஒவ்வொரு பழமும் தலா 3,220 யென்களுக்கு ($22) விற்பனை செய்யப்படவுள்ளன.
 
இந்த புதிய கலப்பின பழமானது ஹொக்கைடோவில் ஐந்து விவசாயிகளால் குறைந்த அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சன் ப்ளவர்ஸ் என்ற ஜப்பானிய தோட்டக்கலை நிறுவனமே இந்த பழத்தினை உருவாக்கியுள்ளது.
 
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தனித்துவமான ஒரு வகை முலாம்பழத்தின் விதைகளில் இருந்தே இந்த பயிர் உருவாக்கப்பட்டுள்ளது.
 
குறித்த உற்பத்தியாளர்கள் இதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக ஏறக்குறைய 05 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
தனித்துவமான முறையில் எலுமிச்சை பழம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்ற இந்த எலுமிச்சை முலாம்பழம் எண்ணற்ற சாகுபடி முறைகள் மற்றும் அறுவடைகளின் விளைவாகும்.