Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய ஸ்பெயின் நாட்டவர்

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய ஸ்பெயின் நாட்டவர்

30 ஆனி 2023 வெள்ளி 01:59| பார்வைகள் : 5098


பெண்களின் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணி அணிந்துகொண்டு 100 மீற்றர் தூரம் ஓடும் போட்டியில் ஸ்பெய்னைச் சேர்ந்த ஆண் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 
இந்த சாதனையை கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே படைத்துள்ளார். 
 
இவர் 2.76 அங்குலம் உயரமான ஹை ஹீல்ஸ் பாதணிகளை அணிந்த நிலையில் 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்தார்.
 
அதேவேளை ஜேர்மனியைச் சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் 2019 ஆம் ஆண்டில் 14.02 விநாடிகளில் ஓடியமையே, ஹை ஹீல்ஸ் ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது.
 
அதோடு ஜமைக்கா வீரர் யூசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 ஓடியமையே உலக சாதனையாக உள்ளது. 
 
இந்த சாதனை நேரத்தைவிட 3.02 விநாடிகளே யூசைன் போல்ட் மெதுவாக ஓடியுள்ளார்.
 
ஏற்கெனவே பல்வேறு கின்னஸ் சாதனைகளைப் படைத்தவர் ரொட்ரிகஸ். 
 
இந்நிலையில், குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தயாராகுவது சவாலானதாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.