Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பிரான்சில் உத்துருளி (Bicycle) பாதையில் "Pistes Cyclables" பயணித்தாலும் குற்றம், பயணிக்கா விட்டாலும் குற்றம்.

பிரான்சில் உத்துருளி (Bicycle) பாதையில்

19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:14| பார்வைகள் : 2626


கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் குறித்த ஒரு கானொளிக் காட்சி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.  அந்த காட்சியில் "Pistes Cyclables" உந்துருளிப் பாதை பிரத்தியேகமாக இருந்தும்கூட, ஒருவர் வாகனங்களுக்கான பாதையில் உந்துருளியை செலுத்தியபோது காவல்துறை அதிகாரிகள் அவருக்கு தண்டப்பணம் அறவிடுவதும், குறித்த நபர் காவ‌ல்துறை அதிகாரிகளுடன் "Code de la route" ஓட்டுனர் குறியீடு பற்றி விவாதிப்பதுமாக அந்த காணொளி அமைந்திருந்தது.

இதுபற்றிய விளக்கம் இதுதான், பிரான்சின் உந்துருளி ஓட்டுனர் குறியீட்டின் படி (Code de la route) உந்துருளிகளுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாதைகளுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளது, ஒன்று வட்ட வடிவில் உந்துருளியின் அடையாளம் வரையப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட குறியீடு இருக்கும்போது ஓட்டுனர்கள் கட்டாயமாக அந்த பாதையில் உந்துருளியை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் குறித்த குறியீடு நீள்சதுரத்தில் உந்துருளியின் அடையாளம் வரையப்பட்டிருந்தால், ஓட்டுனர் விரும்பும் பட்சத்தில் மட்டுமே பிரத்தியேகமாக பாதையில் செல்லலாம்.

அதேவேளை உந்துருளி அல்லாத, இயந்திரத்தில் இயங்கும் எந்த ஒரு வாகனமும் உந்துருளிப் பாதையில் பயணித்தாலோ, அ‌ல்லது தரித்து நிறுத்தினாலோ தண்டப்பணம் 135 Euros செலுத்த நேரிடும்.  ஆனால் தீயணைப்பு படையினரின் வாகனங்கள், காவல்துறையினரின் வாகனங்கள், நோயாளர் காவுவண்டிகள் குறித்த உந்துருளிப் பாதையில் செல்லலாம், தரித்து நிறுத்தலாம்.  ஆனா‌ல் "Sirène" என்னும் சமிச்சை விளக்குகள் ஒளிர்ந்தபடி இருக்க வேண்டும்,