Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை

26 புரட்டாசி 2023 செவ்வாய் 16:02| பார்வைகள் : 2088


தியாக தீபம் 'திலீபன்' நினைவேந்தலை திருகோணமலையின் பல பகுதிகளில் நடத்துவதற்கு தடை விதித்து திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளக்கோட்டன் மண்டபம் மற்றும் காந்தி சுற்றுவட்ட வீதி மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள், பேரணிகள், அணிவகுப்புக்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் ஆர்.எப்.ஜெரோம், ரமேஷ் நிக்கோலஸ், சுஹிர்த பிரியா, கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத், கந்தையா காண்டீபன் என்ற பாமபரசன், கார்த்திக் கல்கிரியன் உள்ளிட்ட பல தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்