Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

டொனல்டு டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய தோனி

டொனல்டு டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய தோனி

8 புரட்டாசி 2023 வெள்ளி 10:04| பார்வைகள் : 1000


இந்திய கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்டு டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகியுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அங்கு நடந்த கோல்ஃப் போட்டியில் கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அழைத்ததின் பேரில் அவருடன் இணைந்து கோல்ஃப் விளையாடினார் தோனி. 

இந்த நட்பு ரீதியான போட்டியின் ஒரு காட்சியை, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிதேஷ் சங்வி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது டிரம்ப் மற்றும் தோனி ஆகியோரின் புகைப்படம், விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நட்பு ரீதியான கோல்ஃப் போட்டியில் தோனி வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஆகிய இருவேறு பின்னணி கொண்ட பிரபலங்கள் ஒன்றாக விளையாடுவது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.