Paristamil Navigation Paristamil advert login
சீனாவில் கடும் வேகமாக பரவும் நிமோனியா..!

சீனாவில் கடும் வேகமாக பரவும் நிமோனியா..!

சீனாவில் கடும் வேகமாக பரவும் நிமோனியா..!

8 மார்கழி 2023 வெள்ளி 09:26 | பார்வைகள் : 1175


சீன நகரில்  பல வைரஸ் தொற்றுகள் அங்கு பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அங்கு நிமோனியா கடும் வேகமாக பரவி பாடசாலை மாணவர்களை  தாக்கி வருகின்றது.

இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா போன்ற வைரஸ்களால் சீனா முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா நேரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கியதால் , உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்துள்ளதோடு தொலைபேசிக்கும் அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில்  சீனாவில் நிமோனியா ,பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ளன. 

மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்ககையையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்