Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கனடாவில் 99ம் பிறந்த நாளை விமானத்திலிருந்து குதித்து கொண்டாடிய மூதாட்டி

கனடாவில் 99ம் பிறந்த நாளை விமானத்திலிருந்து குதித்து கொண்டாடிய மூதாட்டி

4 ஆடி 2023 செவ்வாய் 09:55| பார்வைகள் : 4466


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 99 வயதான மூதாட்டி ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நோக்கில் விமானத்திலிருந்து குதித்துள்ளார்.
 
பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபடும் விருப்பத்தை கொண்ட லக்கி கோயிங் (Lucy Koenig) வயோதிபப் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார் .
 
அந்த வகையில் தனது 99 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பூமியிலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.
 
இந்த அனுபவம் அலாதியானது எனவும் இது மறக்க முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இதற்கு முன்னர் ஒரு தடவை ஸ்கை டைவிங் செய்துள்ள குறித்த பெண் இரண்டாவது தடவையாக இவ்வாறு ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
 
பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த குறித்த மூதாட்டியும் அவரது கொள்ளு பேரனும் எவ்வித பாதிப்புகளும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வாழ்க்கையில் எது எல்லாம் சந்தோஷத்தை தருகின்றதோ அதனை திருத்தியுடன் செய்யுமாறு குறித்த மூதாட்டி ஏனையவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்.
 
தனது நூறாவது பிறந்தநாளில் என்ன மாதிரியான கொண்டாட்டம் செய்ய வேண்டும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என கோயிங் தெரிவித்துள்ளார்.