Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரியுமா?

கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரியுமா?

30 புரட்டாசி 2023 சனி 15:06| பார்வைகள் : 976


கடுகு என்பது சமையலில் பயன்படுத்தபடும் ஒரு மாசா பொருளாகும்.  இவை இல்லாமல் எந்தவொரு சமையலும் முழுமை அடையாது. பொதுவாகவே இதனை நாம் தாளிப்புக்கு தான் பயன்படுத்துவோம். கடுகு தோற்றத்தில் சிறியதாகவும், உருண்டையாகவும் இருந்தாலும் இவற்றில் பல ஆரோக்கிய ரகசியங்கள் உள்ளன. மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது. அவை ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. கடுகு எண்ணெயால் பல உடல்நலப் பிரச்சனைகளையும் குறைக்கலாம். கடுகு சாப்பிட்டால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? 

 கடுகு பொடி மற்றும் கடுகு எண்ணெய் பண்டைய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது. கடுகு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. இவற்றின் மூலம் என்ன மாதிரியான பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

காயங்கள் விரைவில் குணமாகும்: இதில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள் காரணமாக, காயங்கள் விரைவில் குணமாகும். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய காயம்பட்ட இடத்தில் கடுகை நன்கு பொடியாகி காயம் உள்ள இடத்தில் தூவலாம்.

பல் பிரச்சனைகளை குறைக்கலாம்: பலர் பல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். கடுகு சாப்பிட்டால் பல் பிரச்சனைகளும் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். இப்பொழுதெல்லாம் பல்வலி தொல்லை தருவதால்,  கடுகு காய்ச்சிய தண்ணீரைக் குடிப்பது அல்லது வாய் கொப்பளிப்பது நல்ல பலனைத் தரும்.

மூட்டு வலியைக் குறைக்கிறது: மூட்டு வலியால் பலர் அவதிப்படுகின்றனர். எந்த வேலையும் செய்வதோ, வலியுடன் நடப்பதோ கடினம். அப்படிப்பட்டவர்கள் கடுகு மற்றும் கற்பூரத்தை பொடி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து முழங்கால்களில் தடவவும். இவ்வாறு செய்வதால் வலி விரைவில் குறையும்.

சிரங்கு மற்றும் அரிக்கும் தோல் அழற்சி மறைந்துவிடும்: சிலருக்கு சிரங்கு, அரிக்கும் தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அச்சமயத்தில் கடுகை பொடியாக்கி, சிரங்கு, அரிக்கும் தோலழற்சியில் தடவவும். இப்படி செய்தால் பலன் தெரியும்.