Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கடவுளிடம் மன்றாடிய தெனாலிராமன்

கடவுளிடம் மன்றாடிய தெனாலிராமன்

18 ஆடி 2023 செவ்வாய் 07:12| பார்வைகள் : 840


கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் பெரிய ஆளா இருந்தவரு தெனாலிராமன்
அரண்மனை சேவைக்குப்போரதுக்கு முன்னாடி ரொம்ப கஷ்டத்துல இருந்தாரு தெனாலிராமன்

அன்றாட வாழ்க்கைய ஓட்ரதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

தன்னோட மனைவி மற்றும் மகன் வருமையில் வாழுரத தெனாலிராமனால் தாங்கிக்க முடியல

தன்னோட கஷ்டத்த எல்லாம் காளிதான் தீர்த்துவைக்கனும்னு காளி கோயிலுக்குப்போயி வேண்டிக்கிட்டாரு

உடனே தெனாலிராமன் முன்னாடி காளி நேர்ல வந்தாங்க

ராமா உன்னோட கஷ்டங்களை தீர்த்துவைக்க வந்திருக்கேன் உனக்கு நான் ஒரு வரம் தர்ரேன்னு சொன்னாங்க

உடனே தெனாலிராமனோட கைல ரெண்டு பாத்திரம் தானா வந்துச்சு

இந்த பாத்திரத்துல புத்தி அமிர்தம் இந்த பாத்திரத்துல பணஅமிர்தம் ரெண்டும் இருக்கு

புத்தி அமிர்தத்த நீ குடிச்சேன்னா இந்த உலகத்துலயே உன்ன யாரும் ஜெயிக்க முடியாத அளவுக்கு புத்தி கூர்மை உனக்கு கிடைக்கும்

பணஅமிர்தத்தை நீ குடிச்சேன்னா உனக்கு இனிமே பணக்கஷ்டமே வராதுன்னு சொன்னாங்க

ஆனா நீ ரெண்டு பாத்திரத்துல இருக்குறதையும் குடிக்க கூடாது ஏதாவது ஒரு பாத்திரத்துல இருக்குற அமிர்தத்த தான் குடிக்கனும்

எந்த பாத்திரம்னு நீயே முடிவு பன்னிக்கோன்னு சொன்னாங்க

இதக்கேட்ட தெனாலிராமன் பண அமிர்தத்த புத்தி அமிர்தத்துல கலந்து ரெண்டையும் கட கடன்னு குடிச்சிட்டாரு

இதப்பாத்த காளிக்கு கோபம் வந்திடுச்சு அட என்னப்பா நீ நான் ஒரு பாத்திரத்த தான

குடிக்கச்சொன்னேன்

நீ என் ரெண்டையும் குடிச்ச

காளி கையால அமிர்தத்த வாங்குரதே பெருசு அந்த அமிர்தத்த யாராவது வீணாக்குவாங்களானு

கேட்டு சிரிச்சாரு

ராமனோட சமயோஜிதத்த நினைச்ச காளி பரவாஇல்ல உனக்கு ரெண்டு வரங்களையும் கொடுக்குரேன்னு சொல்லிட்டு மறைஞ்சாங்க

அதுக்கு அப்புரமா கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் சேந்து எந்த கஷ்டமும் இல்லாம வாழ்ந்தாரு தெனாலிராமன்