Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிப்பு

1 ஐப்பசி 2023 ஞாயிறு 17:34| பார்வைகள் : 1477


இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன 

இன்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 04 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை 365 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 420 ரூபா. 

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை 351 ரூபா 

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 421 ரூபா .

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 242 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.